
Last Updated:
தூக்கத்திலிருந்த ஹரிஷ் தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனவும் பரீட்சை எழுத மாட்டேன் எனவும் தாயிடம் சொல்லி உள்ளதாக தெரிகிறது.
தூக்கத்திலிருந்த ஹரிஷ் தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனவும் பரீட்சை எழுத மாட்டேன் எனவும் தாயிடம் சொல்லி உள்ளதாக தெரிகிறது. இதனால் தாய் கோபத்தில் தனது மகனை எழுப்பி விட ஹரிஷுக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
சென்னையில் பிரசவ வலி மாத்திரையை போதைப் பொருளாக பயன்படுத்திய கும்பல் கைது…
பின் ஆத்திரமடைந்த ஹரிஷ் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த கட்டிட காவலாளி, ஹரிஷின் தாய் சுமிக்கு தகவல் தெரிவித்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயமடைந்த ஹரிஷை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு ஹரிஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹரிஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் ஹரிஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விருந்துக்கு சென்ற இடத்தில் விபரீதம்.. புதுமண தம்பதி தற்கொலை.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கத்திலிருந்து எழுப்பி பள்ளிக்கு செல்ல சொன்னதால் தாயுடன் தகராறு ஈடுபட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்து பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050
September 17, 2022 9:36 PM IST