
Last Updated:
சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். வெங்கி அட்லூரி இயக்கிய ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்தது.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநருடன் சூர்யா கைகோர்க்கிறார்.
‘கங்குவா’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘ரெட்ரோ’. இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கியவர் வெங்கி அட்லூரி.
இந்தக் கூட்டணி படத்தினை யார் தயாரிக்கிறார்கள், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்ற விவரங்கள் எதுவுமே வெளியாகவில்லை. ஆனால், இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கி அட்லூரியின் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
February 17, 2025 5:54 PM IST
[]
Source link