
Last Updated:
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது பைசன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாழை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பாக அவர் இயக்கிய கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களும் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் அவர் விக்ரமின் மகன் நடிக்கும் பைசன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துடைய ஷூட்டிங் கடந்த மாதம் 17ஆம் தேதி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்தநிலையில் பைசன் படத்துடைய ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்துக்கு “பைசன் காளைமாடன்” என்று டேக் லைனை படக் குழு கொடுத்துள்ளது.
நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்
ஏன் வருகிறேன் என்றும்
உனக்கு தெரியும்
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்
ஆதலால் ….
நீ கதவுகளை அடைக்கிறாய்
நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன். 🦬
—
பைசன் (காளமாடன்)#BisonKaalamaadan 🦬@applausesocial… pic.twitter.com/8ACSMdys4B
— Mari Selvaraj (@mari_selvaraj) March 7, 2025
இந்தப் படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பைசன் படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க – தங்க உடையில் தக தகவென மின்னும் நடிகை ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ் வைரல்.. !
துருவ் விக்ரம் இதுவரை நடித்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், பைசன் திரைப்படம் அவரது கெரியரில் முக்கிய படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
March 07, 2025 6:34 PM IST
[]
Source link