
Last Updated:
பாதிக்கப்பட்ட கடைக்காரர் பூ வியாபாரம் செய்து வருவதாக கோண்டா காவல் நிலைய
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் கான்கே சாலைப் பகுதியில் அமைந்துள்ள ‘ஃப்ரெஷ் பெட்டல்’ என்ற பூக்கடை ஒன்று உள்ளது. அந்தக் கடைக்குள் பட்டப்பகலில் ஆயுதங்களுடன் புகுந்த இரு நபர்கள், அந்தக் கடையில் இருந்தவரை தாக்கிவிட்டு, சுமார் ரூ. 1.5 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஜார்க்கண்ட் முதலமைச்சரின் வீட்டின் அருகே இருக்கும் கடையில் பட்டப்பகலில் இப்படி ஒரு பயங்கர கொள்ளை சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இந்தக் கொள்ளை சம்பவம் முழுவதும், அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. தற்போது அந்தக் காட்சிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.
அந்த சிசிடிவி காட்சியில், மாஸ்க் அணிந்த இரண்டு நபர்கள் கடைக்குள் நுழைந்து, பாதி ஷட்டரை கீழே இறக்கிவிடுகின்றனர். பிறகு ஒரு நபர், கடைக்காரரை நோக்கி ஒரு ரிவால்வரை நீட்டுகிறார். மற்றொரு நபர் பணத்தை கேட்டு மிரட்டுகிறார். பிறகு பணம் கொடுக்க மறுக்கும் கடைக்காரரை சரமாரியாக தாக்குகின்றனர். இந்தக் காட்சிகள் எல்லாம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : குழந்தை கண்முன்னே கங்கையில் அடித்துச் செல்லப்பட்ட பெண்.. விபரீதத்தில் முடிந்த ரீல்ஸ் மோகம்
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து கோண்டா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இருந்து பெறப்பட்ட காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.
சம்பவம் நடந்த கான்கே சாலை, ராஞ்சியின் பரபரப்பான பகுதி மட்டுமல்ல, முதலமைச்சர் மற்றும் மாநில சட்டமன்ற சபாநாயகரின் இல்லம் உட்பட பல மூத்த அதிகாரிகள் வசிக்கும் பகுதியாக இருக்கின்றது. எனவே இந்த பகுதியானது உயர்மட்ட பாதுகாப்பு பகுதியாகவும் உள்ளது.
April 17, 2025 9:01 PM IST
துப்பாக்கிக் கொண்டு பயங்கரத்தை நிகழ்த்திய இருவர்.. முதல்வர் வீட்டின் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்
[]
Source link