Last Updated:
T.Nagar | தி.நகரை மெருகேற்றி, அங்குள்ள வியாபாரிகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் நிச்சயம் அது ஒரு பெரிய சுற்றுலாத்தலமாக மாறும், அன்னிய செலாவணி பெருகும் என தெரிவித்தார்.
தி. நகரை சுற்றுலாத்தலமாக அறிவித்து, தி. நகரையும் பாண்டி பஜாரையும் இணைத்தால் அரசுக்கு மிகப்பெரிய வருமானம் வரும் என சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய கதர் மற்றும் கைத்தறி, வணிக வரி துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, “நான் அமெரிக்கா, சீனா, ஜப்பான், துபாய் என உலக நாடுகளில் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். தி.நகரைப் போல ஒரு மிகப்பெரிய மார்க்கெட் உலகத்திலேயே வேறு எங்கும் இல்லை என்பது என்னுடைய நிதர்சனமான உண்மை.
அத்தகைய தி.நகரை சுற்றுலாத் தலமாக மாற்றினால் கண்டிப்பாக இன்றைக்கு வருகின்ற இந்த வருமானத்தினை விட அதிகமாக கிடைக்கும். எப்படி ஒரு காலத்தில் பாண்டிச்சேரிக்கு போனால் விலை கம்மியோ, அதுபோல் உலகம் முழுவதிலுமிருந்து தி.நகருக்கு வருகிறார்கள்.
எனவே அதனை மெருகேற்றி, அங்குள்ள வியாபாரிகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் நிச்சயம் அது ஒரு பெரிய சுற்றுலாத் தளமாக மாறும், அன்னிய செலாவணி பெருகும் என தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் மா.சுப்ரமணியன் மேயராக இருக்கும் போது தி.நகர் மாறி வருகிறதே… அந்த பாலத்தை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். கடந்த ஆட்சியில் பாண்டி பஜாரை ஸ்மார்ட் சிட்டி என கூறிவிட்டனர். எனவே அரசு தனிக் கவனம் எடுத்து தி.நகரையும், பாண்டி பஜாரையும் இணைத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்தால் மிகப்பெரிய வருமானம் அரசுக்கு வரும்”, என்றார்.
April 28, 2022 10:17 PM IST

