
Last Updated:
ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுகவினர் ஒருமித்து திமுக அரசை வீழ்த்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுகவினரும் ஓர் அணியில் வர வேண்டும் என, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாங்கள் இருக்கிறோமா என்பதை நயினார் நாகேந்திரன்தான் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதனிடையே அதிமுக ஓரணியாக வேண்டும் என சசிகலாவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நெல்லையில் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன், சசிகலாவின் கருத்தை வழிமொழிவதாக தெரிவித்தார். திமுக அரசை வீழ்த்த அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
September 01, 2025 10:15 PM IST