Last Updated:
திமுகவிலிருந்து சில தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 38 விரைவு ரயில்கள் தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் நின்று செல்லும் எனவும் கூறினார்.
திமுகவிலிருந்து சில தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
திமுகவில் இருந்து பெரிய தலைவர்கள் சிலர் பாஜகவில் இணைய உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆம்பூர் உட்பட 38 இடங்களில் 38 விரைவு ரயில்கள் திங்கட்கிழமை முதல் நின்று செல்ல மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறினார். நாளை முதல் தமிழகத்தில் இந்த நடைமுறை அமலாகிறது என்றும் அவர் கூறினார்.
அன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகியோர் திமுகவில் இணைந்திருப்பது அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் எல்.முருகன் கூறினார். திமுகவில் இருந்து மிகப்பெரிய தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளனர் என்றும் திமுகவில் உள்ள சிலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறினார்.
தேர்தல் நேரங்களில் சிலர் கட்சிகள் மாறுகிறார்கள் என்றாலும், ஆனால் யார் போகிறார்கள் எங்கிருந்து போகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றும் எல்.முருகன் கூறினார். மேலும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பட்டியல் இன மக்கள் மீது அக்கறையில்லை என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 17, 2025 9:57 PM IST







