Last Updated:
NDA alliance | தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜக தலைவர்கள் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வி.கே.சசிகலாவை இணைப்பது குறித்து பாஜக நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிகார் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்தும் பணியை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை மீண்டும் இணைப்பது குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
நாளை மறுதினத்துக்குள் முக்கிய முடிவு எடுக்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதனால், அவர் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
December 13, 2025 1:05 PM IST





