தமிழ்நாடு மீனவர்களை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை… வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Spread the love


Last Updated:

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.

News18News18
News18

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். 13.07.2025 அதிகாலையில், ஏழு மீனவர்கள், அவர்களின் இயந்திர மீன்பிடிப் படகுடன் கைது செய்யப்பட்டனர்.

அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், மற்றொரு இயந்திரப் படகு இலங்கைக் கடற்படைக் கப்பலால் மோதப்பட்டதாகவும், இந்தப் படகின் பின்புறம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வருகிறது.

மீண்டும் மீண்டும் நிகழும் இந்த சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. அவை நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களை நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ச்சியான துயரங்களுக்கும் உள்ளாக்குகின்றன.

இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலர் இன்னும் இலங்கைக் காவலில் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தற்போது, 232 தமிழக மீன்பிடிப் படகுகளும் 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொடர்ச்சியான அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைக்கக்கூடிய அனைத்துத் தூதரக வழிகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



Source link


Spread the love
  • Related Posts

    Mengenal Jenis-jenis Slot Gacor dan Cara Memilih Situs Bet yang Tepat

    Spread the love

    Spread the love     Mengenal Jenis-jenis Slot Gacor dan Cara Memilih Situs Bet yang Tepat Di dunia perjudian online, slot bet 100 telah menjadi pilihan favorit bagi banyak pemain yang mencari pengalaman…


    Spread the love

    தாய்லாந்து – கம்போடியா நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: மலேசிய பிரதமர் தகவல் | Thailand Cambodia agree to unconditional ceasefire says Malaysian PM

    Spread the love

    Spread the love      கோலாலம்பூர்: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் இன்று மலேசியாவின்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *