
Last Updated:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், புலியை சேர்த்து புதிய கொடியை அறிமுகப்படுத்தினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியில் புலியை சேர்த்து புதிய கொடியை அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழ்ழீழத்தில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழீழத்திலிருந்து முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன், பத்திரிகையாளர் அய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அக்கட்சியின் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே இருக்கக்கூடிய மூவண்ணக் கொடியில் புலியை சேர்த்து புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார்.
மேலும் புதிய கொடியை அறிமுகப்படுத்தியப்பிறகு, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அதை மாநாட்டை திடலிலும் ஏற்றி வைத்தார்.