
Last Updated:
தனுஷ் நடிப்பில் வெளியாகும் குபேரா திரைப்படத்திற்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அத்துடன் படத்தின் நீளம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியாகும் குபேரா திரைப்படத்திற்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அத்துடன் படத்தின் நீளம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘குபேரா’. இந்த படத்தின் டிரைலர் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தனுஷ் – நாகர்ஜுனா இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை வரும் 20-ம் தேதி வெளியிடுகின்றனர். இதற்காக படத்தை தணிக்கைக்கு அனுப்பி இருந்தனர்.
அந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் குபேரா படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியிருக்கின்றனர். படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் ரன்னிங் டைம் 181 நிமிஷம் (3 மணி நேரம் 1 நிமிஷம்) எனவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 3.15 மணிநேரம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 மணி நேரம் 1 நிமிஷம் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
June 18, 2025 7:08 PM IST
[]
Source link