Last Updated:
Fire at Rajiv Gandhi Government Hospital : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தின்போது நோயாளிகளை வெளியே தூக்கிவந்து காப்பாற்றிய செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த தீப்பற்றி எரிந்த கிடங்கின் மேல் தளத்தில் இருந்த நரம்பியல் பிரிவில் இருந்த நோயாளிகள் அலற தொடங்கினர். இதையடுத்து உடனடி மீட்பு நடவடிக்கைகளில் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட தொடங்கினர். நரம்பியல் பிரிவில் இருந்து அருகே உள்ள துணை பிரிவுக்கு நோயாளிகளை மாற்ற முடிவு செய்தனர்.
இந்நிலையில், தகவல் அறிந்து எழும்பூர், வண்ணாரப்பேட்டை, தியாகராயநகர், அசோக்நகர், திருவல்லிக்கேணி நிலையங்களில் இருந்து தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர தொடங்கினர். அதேவேளை கரும்புகை அளவுக்கு அதிகமாக வெளியேற தொடங்கியதால் ஜன்னல்களை உடைத்து, தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தீ விபத்து பற்றி கேள்விபட்ட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டனர். எந்த நோயாளிகளுக்கும் இதில் பாதிப்பில்லை என்ற தகவல் அறிந்து நிம்மதி அடைந்தனர். மாலை 5.30 மணிக்கு கரும்புகை வெளியேறுவது நின்று, தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில்,
மனிதத்தால் உந்தப்பட்டு – நேரத்தின் அருமை உணர்ந்து – பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்!காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்! pic.twitter.com/jzMftjjSO3
— M.K.Stalin (@mkstalin) April 27, 2022
இந்த நிலையில், செய்தியாளர்களின் இந்த செயலை பாராட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு, நேரத்தின் அருமை உணர்ந்து, பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்! காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!” என்று ட்விட்டர் உள்ளிட்ட சமுகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு பாட்டியுள்ளார்.
April 28, 2022 8:35 AM IST

