
Last Updated:
Happy Street : செண்டை மேளம் டிரம்ஸ்,DJ மேளங்கள் முழங்க இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என கலை கட்டினர். மேலும் சிறுவர்கள் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம் என களை கட்டியது.
நம்ம வீதியில் மகிழ்ச்சியான நேரம், மகிழ்ச்சி இப்போது நம்ம வீட்டின் அருகில், வீதியில் உங்களுக்கு பிடித்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விளையாட்டு இசை நடனம் என ஏராளமான விளையாட்டு நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் குழந்தையாய் மாறி விருப்பமான விளையாட்டுக்கள் அனைத்தையும் யாரும் இல்லா வீதியில் கொண்டாடினர்.
எப்போதும் நெரிசலாக இருக்கும் கொரட்டூரின் வீதி இன்று விளையாட்டு வீதியாக மாறியது 10 கிலோமீட்டர் மாரத்தான் யோகா, கால்பந்து மட்டைப்பந்து, பூப்பந்து, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, சைக்கிள் ரைட்,டென்னிஸ் கயிறு இழுத்தல் மற்றும் உடல் பயிற்சிகள் போன்ற விளையாட்டுகளை ஏராளமான ஒரு விளையாடி மகிழ்ந்தனர்.
உயர்ரக சைக்கிள்களை திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்லூரி மாணவர்கள் கைது!
செண்டை மேளம் டிரம்ஸ்,DJ மேளங்கள் முழங்க இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என கலை கட்டினர். மேலும் சிறுவர்கள் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம் என களை கட்டியது.
இந்த நிகழ்வினை ஆவடி மாநகர காவல் இணை ஆணையாளர் விஜயகுமாரி செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணன் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் காவல் ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளுவர், ரமணி,ஜோதிலட்சுமி, ஆவடி மாநகர காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
இதில் ஆவடி மாநகர காவல்துறை இணை ஆணையர் விஜயகுமாரி பொதுமக்களோடு பொதுமக்களாக அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களுடன் செல்பி மற்றும் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் மின்னல் குழந்தைகளை சிலம்பம் சுற்றியதை கண்டு மகிழ்ந்து குழந்தையை தூக்கி அணைத்து கொண்டார்.
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளுக்காக செய்தியாளர் கன்னியப்பன்.
Chennai,Tamil Nadu
August 28, 2022 2:39 PM IST