
Last Updated:
Chennai District | சென்னையில் குப்பையை தரம் பிரிக்கும் போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து இவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து 108 அவசர ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். உடனடியாக அவரை அவசர ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருவெங்கடம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் புறநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாதவரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
மாதவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருவெங்கடம் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். குப்பை தரம் பிரிக்கும் தொழிலாளி குப்பை தரம் பிரிக்கும் போது அதிலிருந்து வெளியேறிய விஷவாயு காரணமாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக உடன் பணியாற்றிய சக ஊழியர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : அசோக் குமார்