
Last Updated:
Udayam Theatre| வீழ்ந்தது 40 ஆண்டுகால சரித்திரம். உதயம் திரையரங்கு இடிக்கும் பணி தீவிரம்.
சென்னையின் பொழுதுபோக்கு வரலாற்றில் உதயம் திரையரங்கத்தின் பங்கு மிகப் பெரியது. ஒரு காலத்தில் சென்னை ரசிகர்களின் இதயத்துடிப்பாக உதயம் இருந்தது. மல்டிபிளக்ஸ் கலாச்சாரம் உருவாகாத காலத்திலேயே நான்கு திரைகளை கொண்டு உதயம் பிரம்மாண்டமாக இயங்கி வந்தது. ஆனால் தற்போது உதயம் தியேட்டர் இடிக்கப்பட உள்ளது. இதை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்பு உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள், கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே சமூக வலைதளங்களில் உதயம் தியேட்டர் இடிப்புதான் ரசிகர்களை கவலை கொள்ள செய்திருக்கிறது.
மெரினா பீச், ஜெமினி ப்ரிட்ஜ், எல்ஐசி டவர் போன்ற சென்னையின் அடையாளங்கள் போல, உதயம் திரையரங்கமும் ஒன்று. “உதயம் தியேட்டரில என் இதயத்தை தொலைச்சேன்” என்ற பாடலை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியுமா?
மல்டிபிளக்ஸ் நேம் பெருக்கத்தால் கடந்த சில வருடங்களாகவே உதயம் தியேட்டர் ரிலீசுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதைத் தொடர்ந்து உரிமையாளர்கள் பல பேர் மாறியதால் உதயம் தியேட்டரை சரியாக நிர்வகிக்க முடியாமல் நிரந்தரமாக மூடப்படுவதாக போன வருடம் தகவல் வெளியானது. தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே உதயம் திரையரங்கம் இடிக்கப்பட உள்ளதென்ற தகவல் பரவியிருந்த நிலையில், தகவல் உண்மை தான் என சொல்லும் அளவுக்கு உதயம் திரையரங்கை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இடிப்பு பணிகள் முடிந்தவுடன், அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என தகவல்கள் கசிந்துள்ளன. என்னதான் உதயம் தியேட்டர் அசோக் பில்லரை விட்டு சென்றாலும் அசோக் பில்லர் என்றால் உதயம் தியேட்டர் என்ற மக்களின் மன ஓட்டத்தை யாராலும் அழித்து விட முடியாது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 07, 2025 12:52 PM IST
[]
Source link