
Last Updated:
சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப் பணிகள் தொடங்கியுள்ளன. ஹைதராபாத்தில் இந்தப் படத்துக்கான பூஜை இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.
சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப் பணிகள் தொடங்கியுள்ளன. ஹைதராபாத்தில் இந்தப் படத்துக்கான பூஜை இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.
அண்மையில் சூர்யா நடிப்பில் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்தப் படத்துக்கான பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. வெங்கி அட்லூரியை பொறுத்தவரை அவர் தனுஷை வைத்து ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர்.

சூர்யாவின் 46-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகிறது. ‘பிரேமலு ‘ படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையான மமீதா பைஜூ கதாநாயகியாக இணைகிறார்.

இவருடன் ரவீனா டாண்டன் தெலுங்கு சினிமாவில் மீண்டும் மறுபிரவேசம் செய்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேசிய விருதைப் பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைக்கிறார். 2026 ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மே மாத இறுதியில் தொடங்குகிறது.
[]
Source link