Last Updated:
ADMK : சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிமுக என்றும் இரட்டை வேடம் போட்டதில்லை என்றும், சிறுபான்மை மக்கள் நலனுக்காக வாய் சொல்லில் மட்டும் இல்லாமல் அதனை கடைபிடிக்கும் கட்சி அதிமுக எனவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இஸ்லாமிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது என்று கூறினார். ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சார்பில் அரிசி வழங்கும் திட்டம் 2001 முதல் தொடங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தன கட்டைகள் வழங்கியது என பல்வேறு நல திட்டங்களை அதிமுக அரசு வழங்கியது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், அதிமுக இரட்டை வேடம் போடவில்லை என்றும் சிறுபான்மை மக்கள் நலனுக்காக வாய்சொல் வீரர்களாக மட்டும் இல்லாமல் அதனை கடைப்பிடிக்கும் கட்சியாக அதிமுக உள்ளது என்றும் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிவகுத்த பாதையில் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அதிமுக தொடர்ந்து செயல்படும் என்றார்.
April 29, 2022 5:55 AM IST

