
Last Updated:
சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த நடிகர் புகழ் நடித்துள்ள ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த நடிகர் புகழ் நடித்துள்ள ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் புகழ். அதன் மூலம் கவனம் பெற்ற புகழ் அடுத்து வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
சசிகுமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அயோத்தி’ திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கௌதம் கார்த்திக்கின் ‘1947’ படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் அடுத்து புகழ் நாயகனாக நடிக்கும் படம் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’. ‘வேலை’, ‘என்னவளே’, ‘ஜூனியர் சீனியர்’ ஆகிய படங்களை இயக்கிய ஜே சுரேஷ் இயக்கியிருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டு சென்றது. இந்த படத்தில் அனிமேஷன் பயன்படுத்தாமல் உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். எனவே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படாமல் இருந்த நிலையில் வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
June 05, 2025 9:01 PM IST
[]
Source link