
Last Updated:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒப்பிடும்போது குறைந்த நாட்கள் மட்டுமே இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறும்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாதம் 19ஆம் தேதி . இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெறும். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டும் ஒரே போன்று தோற்றமளித்தாலும் இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன.
போட்டியின் விதிமுறைகள், பரிசுத்தொகை உள்ளிட்டவை இரு போட்டிகளுக்கும் மாறுபடும். ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதில் 10 முதல் 14 அணிகள் பங்கேற்கும்.
Also Read: சாம்பியன்ஸ் கோப்பை 2025: கம்மின்ஸ் முதல் பும்ரா வரை..! தொடரிலிருந்து விலகிய 9 முக்கிய வீரர்கள்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் 2-4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஒப்பிடும்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறைவான முறை நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டில் உலகக் கோப்பை தொடர் நடத்தப்படும் போது அந்த ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ஐசிசி தவிர்த்து வருகிறது.
போட்டியின் அடிப்படையில் பார்க்கும்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நாக் அவுட் மேட்ச்சுகள நடத்தப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தமே 8 அணிகள் பங்கேற்கும்.
குரூப் போட்டிகளில் ரவுண்டு ராபின் முறை கடைபிடிக்கப்படும். அதைத் தொடர்ந்து அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒப்பிடும்போது குறைந்த நாட்கள் மட்டுமே இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறும்.
Also Read: சாம்பியன்ஸ் கோப்பை 2025: கம்மின்ஸ் முதல் பும்ரா வரை..! தொடரிலிருந்து விலகிய 9 முக்கிய வீரர்கள்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகபட்சம் 14 அணிகள் கலந்து கொள்ளும். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதி உள்ளது. பரிசுத்தொகை உலகக் கோப்பை தொடருக்கு அதிகமானதாகவும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு குறைவானதாகவும் இருக்கும்.
February 11, 2025 6:30 PM IST
[]
Source link