சம்பளம் முதல் கார் வரை: போப் பிரான்சிஸ் கையாண்டது எப்படி? | details over Pope Francis net worth, salary, perks and assets

Spread the love


வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது எளிய வாழ்க்கை, மாதச் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலமானார். மிக நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்த அவர், தனது 88-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை உலகிலேயே அதிக சொத்து கொண்ட மத ரீதியான ஒரு நிறுவனமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 1.3 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், ஓர் எளிமையான தலைக்கனமில்லாத நபராக, தனது வாழ்க்கையை வாழ்ந்தற்காக போற்றப்படுபவர்.

போப் பிரான்சிஸ் மாதம்தோறும் 32,000 அமெரிக்க டாலர் சம்பளமாக பெற தகுதி பெற்றிருந்த போதும், தனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்து, அந்தச் சம்பளத்தை தேவாலயங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்துள்ளார்.

போப் பிரான்சிஸின் சொத்து மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. போப்பாக பதவியேற்பதற்கு முன்பாகவே பல்வேறு பெரிய பதவிகளை வகித்துள்ளார். இருப்பினும் தனக்குச் சம்பளம் வேண்டாம் என மறுத்துள்ளாதாக கூறப்படுகிறது. இவர், சீர்திருத்தத்தை முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டார். திருச்சபை நிதிகளில் வெளிப்படைத்தன்மையை வெளிக் கொண்டுவந்தார்.

2018-ஆம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் போப் பிரான்சிஸுக்கு 2 லட்சம் டாலர்கள் மதிப்பிலான லம்போர்கினி காரை பரிசாக அளித்தது. ஆனால், போப் பிரான்சிஸ் அந்த காரை தன்னுடைய சொந்த நோக்கத்துக்காக பயன்படுத்தவில்லை. அதை வாங்கி, ஏலத்தில் விடுத்து அந்த பணத்தை எடுத்து பல்வேறு தனது பெயரில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக வழங்கினார்.

ஆரம்பரமாக வாழ வாய்ப்பு கிடைத்தும், பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, மனிதநேயம், பணிவு, எளிமை, கண்ணியம், ஒழுக்கம், சம நீதி உள்ளிட்ட பண்புநலன்களையே தனது வாழ்நாள் வரை கடைபிடித்தவர் போப் பிரான்சிஸ்.





Source link


Spread the love
  • Related Posts

    Crime Time | ஷேர் மார்க்கெட் பெயரில் போங்கு..- முதலீடுக்கு 10% லாபம் என புரூடா..

    Spread the love

    Spread the love      Crime Time | ஷேர் மார்க்கெட் பெயரில் போங்கு..- முதலீடுக்கு 10% லாபம் என புரூடா.. Source link Spread the love     


    Spread the love

    ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் | Roses blooming in Ooty Park

    Spread the love

    Spread the love      ஊட்டி: கண்ணைக் கவரும் வகையில், ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்துச் செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டு நினைவாக 1995-ம் ஆண்டு 10 ஏக்கர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *