
Last Updated:
நடிகை திரிஷா, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியான நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இணையத்தில் மற்றவர்கள் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு வேறு வேலையே இருக்காதா என நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.
அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகை திரிஷா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், திரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்த பதிவில், ஷப்பா.. விஷத்தனமான சிலர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சமூக வலைதளங்களில மற்றவர்கள் குறித்து அவதூறு பரப்புவது மட்டும் தான் அவர்களது வாழ்க்கையா என்றும் அவர்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருப்பதாகவும் திரிஷா பதிவிட்டுள்ளார். மேலும், அது போன்ற நபர்களுடன் வாழ்பவர்களை நினைத்து வருந்துவதாக பதிவிட்டுள்ள திரிஷா, கோழைத்தனமாக இருக்கிறார்கள் அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
திடீரென திரிஷாவின் இந்த பதிவு எதற்காக என்றும்.. அவர் இவ்வாறு பதிவிட என்ன காரணமென்றும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
April 11, 2025 9:11 PM IST
[]
Source link