
Last Updated:
திருமணத்துக்குப் பிறகு பெண்களை ஆண்கள் ஏன் கைவிடுகிறார்கள் என்பது தொடர்பான பதிவை நடிகை சமந்தா லைக் செய்துள்ளார். மேலும் அதில் கூறப்பட்டுள்ள காரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு பெண்களை ஆண்கள் ஏன் கைவிடுகிறார்கள் என்பது தொடர்பான பதிவை நடிகை சமந்தா லைக் செய்துள்ளார். மேலும் அதில் கூறப்பட்டுள்ள காரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில், ‘Successverse’ என்ற ஐடி செயல்பட்டு வருகிறது. அதில் ‘திருமணத்துக்கு பிறகு ஆண்கள் ஏன் நோய்வாய்ப்பட்ட பெண்களை கைவிடுகிறார்கள்.. அதற்கு பின்னால் உள்ள உண்மை’ என்ற தலைப்பில் அண்மையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இருவர் அமர்ந்து அதற்கான காரணம் குறித்து பேசுகிறார்கள்.
அவர்கள் பேசும்போது, ‘புள்ளிவிவரத்தின்படி, 624 சதவீத ஆண்கள் நோய்வாய்ப்பட்ட பெண்களை கைவிடுகிறார்கள். அதேசமயம் நோய்வாய்ப்பட்ட ஆண்களாக இருந்தாலும், பெண்கள் அவர்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களை கைவிடுவதில்லை’ என தெரிவிக்கின்றனர்.
இதற்கான பின்னணி குறித்து பேசும் இருவர், சமூக சூழலும், பாலின ஏற்றத்தாழ்வுகளும், குணாதிசயங்களும் இதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர். இந்த வீடியோவை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நடிகை சமந்தா இந்த வீடியோவுக்கு லைக் செய்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த தகவலை ஏற்றுக்கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடிகை சமந்தாவை பொறுத்தவரை அவர் நாக சைதன்யாவை 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2021-ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். 2022-ல் தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையை பெற்று வருவதாகவும் சமந்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
April 21, 2025 7:28 PM IST
[]
Source link