
Last Updated:
சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படம் பொருளாதார பிரச்சினையால் தள்ளிவைக்கப்பட்டது. சத்யசிவா இயக்கிய இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சசிகுமார் நடிப்பில் உருவான ‘ப்ரீடம்’ திரைப்படம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமாருடன் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ள திரைப்படம் ‘ஃப்ரீடம்’. இந்தப் படத்தில் சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் உண்மையைக் கதையை இப்படம் பேசுவதாக இயக்குநர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரங்கள், ஏற்பாடுகளை படக்குழு தீவிரமாக செய்து முடித்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அன்று பொருளாதார பிரச்சினை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனையடுத்து ட்ரெய்லர் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பு காரணமாக படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் படம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து விஜய் கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்பாராத சூழல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ‘ஃப்ரீடம்’ திரைப்படம் விரைவில் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
July 18, 2025 9:42 PM IST
[]
Source link