
Last Updated:
லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ.வில் கைதி தான் முதல் படமாக இருந்துள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கைதி திரைப்படத்தை மலாய் மொழியில் ரீமேக் செய்துள்ளனர். அதற்கான முதல் பார்வையை பட குழு வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. விஜயின் பிகில் திரைப்படத்துடன் வெளியானது கைதி, வசூல் ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அந்தப் படத்தின் வெற்றியின் மூலம் லோகேஷ் கனகராஜ் அடுத்த அடுத்த படங்களில் விஜய், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைய வாய்ப்பைப் பெற்றார். மெகா ஹிட் படமான கைதியை தற்போது மலேசியாவின் மலாய் மொழியில் ரீமிக்ஸ் செய்திருக்கின்றனர்.
இதுவரை எந்த ஒரு தமிழ் படத்தையும் மலேசியாவில் ரீமேக் செய்ததில்லை. முதல் முறையாக கைதி திரைப்படத்தை உரிமையை பெற்று ரீமிக்ஸ் செய்துள்ளனர். அந்த திரைப்படத்திற்கு Banduan என தலைப்பு வைத்துள்ளனர். அதற்கான முதல் பார்வையை தற்போது படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கைதி படத்தின் மலாய் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் கவனம் பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ.வில் கைதி தான் முதல் படமாக இருந்துள்ளது.
August 29, 2025 12:04 PM IST
[]
Source link