
Last Updated:
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளியை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து திலகபாமா உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை காவல்நிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து பாமக பொருளாளர் திலகபாமா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 10 நாட்களாகியும் இன்னும் குற்றவாளியைக் கண்டுபிடிக்காத காவல்துறையைக் கண்டித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்த பாமக பொருளாளர் திலகபாமா கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
சிறுமிக்கு உரிய மருத்துவ வசதிகளோ, கவுன்சிலிங்கோ அரசுத் தரப்பில் ஏற்படுத்தித் தரவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை காவல் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரோடு பாமக நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்த்த பிறகு ஒரு ஆண் அருகில் நிற்பதற்கு எனக்கே பயமாக இருக்கிறது என திலகபாமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
July 21, 2025 6:00 PM IST
[]
Source link