
Last Updated:
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், கிரானைட் முறைகேடு வழக்கில் ஆஜராக கால அவகாசம் கோரியுள்ளார். பாதுகாப்பு பிரச்சினையால் நேரில் ஆஜராக முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிரானைட் முறைகேடு வழக்கில் ஆஜராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கால அவகாசம் கோரியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர், விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குவாரிகளில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுக்கப்பட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக 2011ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை செய்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம், தனது அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், கனிம வள வழக்கு மதுரை மாவட்ட கனிம வள நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் இதில் ஆஜராகாத சகாயம், கால அவகாசம் கோரி இந்நீதிமன்றத்துக்குக் கடிதமும் எழுதினார்.
அதில், தனக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டதால், தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என உயர்நீதிமன்றத்திற்கு தான் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதனால் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.
July 02, 2025 5:33 PM IST
[]
Source link