
Last Updated:
அஜித்-ஷாலினி தம்பதியின் வீடியோ வைரலாகி வருகிறது. அஜித், ஷாலினியின் ஆசிர்வாதம் பெறும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வீட்டுக்கு சென்றதும் தான் காலில் விழ வேண்டும் என ரசிக்கும் வகையில் மனைவி ஷாலினியை அஜித் கலாய்த்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் அஜித் – ஷாலினி தம்பதி. அமர்களம் படத்தில் தொடங்கிய இவர்களின் காதல் பயணம் இன்றும் இந்த சர்ச்சையும் இல்லாமல் நீடித்து வருகிறது. இவர்களுக்கு மகள் அனௌஷ்கா மற்றும் மகன் ஆத்விக் என 2 குழந்தைகள் உள்ளனர். அஜித் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இல்லையென்றாலும் ஷாலினி அவர்களது வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.
தற்போது அஜித் காலில் விழுந்து ஷாலின் ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என வேண்டி அனுசரிக்கப்படும் வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், பூஜையில் கலந்து கொண்ட பின் தன் கணவர் அஜித்குமார் காலில் விழுந்து ஷாலினி ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
கணவரின் காலில் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பதிவிட்டார். வீடியோவில் ஷாலினி காலில் விழுந்ததை குறிப்பிட்டு, வீட்டிற்கு சென்றதும் தானும் அவர் காலில் விழ வேண்டும் என அஜித் கூறியிருப்பதை ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
August 10, 2025 8:16 AM IST
[]
Source link