Last Updated:
கலைஞர் விருது பெறுவதற்கு நடிகர் நாசர் மிகமிக பொருத்தமானவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
முத்தமிழ் பேரவையின் சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர், நடிகர் நாசருக்கு கலைஞர் விருதையும், வடூவூர் எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்திக்கு ராஜரத்னா விருதையும் வழங்கினார்.
இந்ந நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழாவை நான் மிஸ் பன்ன மாட்டேன். தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன். இப்போது பேசும் போது கூட நாசர் கூட சொன்னார், அடுத்த ஆண்டும் முதலமைச்சராக இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்றார். நான் அடக்குத்துடன் சொல்கிறேன் முதலமைச்சராக வருகிறனோ இல்லையோ முதல் ஆளாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இயக்குனர் அமிர்தன் அழைத்தால் நான் மறுக்க முடியுமா. சின்ன வயதில் இருந்து என்னுடைய வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர் மட்டும் இல்லை அடித்து திட்டியவர். என்னை வளர்த்து வளத்திருக்கக் கூடியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அமிர்தன் என்றார்.
இதையடுத்து நடிகர் நாசர் பேசுகையில், இந்த விருது மகிழ்ச்சியை பெருமையும் கொடுத்ததை விட பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது. இந்த விருதை தக்க வைத்துக் கொள்ள இன்னும் பலபடி ஏற வேண்டும் எனது கலையை ஆழமாக பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை எனக்கு இந்த விருது கொடுத்திருக்கிறது என்று தெரிவித்தார்.
December 15, 2025 10:08 PM IST






