
தெலுங்கில் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் திரைப்படத்தின் இயக்குநராக அறிமுகமான ராஜமவுலி, மகதீரா, ஈகா படங்கள் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தப் படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வசூலை வாரிக் குவித்தன. தனது முந்தைய 9 படங்கள் மூலம் டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த ராஜமவுலி, 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி மூலம் இந்தியத் திரையுலகை வியக்க வைத்தார்.
அதைத் தொடர்ந்து, பாகுபலி–2 வாயிலாக இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தி, ரூ.1000 கோடி வசூலை அசால்ட்டாகக் கடக்க வைத்தார். பின்னர், ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பிடித்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததும், உலக அளவில் பிரபலமானார் இயக்குநர் ராஜமவுலி. புகழின் உச்சியில் இருக்கும் இயக்குநர் மீது அவருடன், 34 ஆண்டுகளாக நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர் பகிரங்கக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
ராஜமவுலியின் தொடக்க காலம் முதல் சீனிவாச ராவ் என்பவர், நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில், தங்களுடைய நட்பு பற்றி திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அறிவார்கள் என்றும், ராமாயணம், மகாபாரதம் போன்று தங்களுடைய வாழ்க்கையிலும் ஒரு பெண் நுழைந்தார் என்றும், முதலில் ராஜமவுலியுடன் நெருக்கமாக இருந்த அந்தப் பெண், பின்னர் அவரை விட்டுவிட்டுத் தன்னுடன் நெருக்கமானதாக சீனிவாச ராவ் குறிப்பிட்டுள்ளார்.
முக்கோணக் காதல் போன்ற இந்த விவகாரத்தில், ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலைத் தியாகம் செய்ய வேண்டும் என்று ராஜமவுலி கேட்டுக் கொண்டார். முதலில் தான் மறுப்புத் தெரிவித்த போதும், ராஜமவுலி தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், இறுதியில் அந்தப் பெண்ணையும், அவர் மீது கொண்ட காதலையும் தியாகம் செய்ததாக சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: “உங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது” – ‘டிராகன்’ நடிகை கயாது லோஹர் ஷேரிங்ஸ்!
ஆனால், இந்த விவகாரத்தைத் தான் வெளியில் கூறியதாகக் கருதி, ராஜமவுலி தன்னைப் பல்வேறு வகைகளிலும் துன்புறுத்தத் தொடங்கியதாகக் கண்ணீர் சிந்தியுள்ளார். தொடர்ந்து அவர் கொடுக்கும் டார்ச்சரால் 50 வயதைக் கடந்தும் தான் திருமணம் செய்யவில்லை என்று கதறியுள்ளார். இதற்கு மேலும் வேறு வழியின்றித் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி கடிதமும் எழுதியுள்ளார்.
Star director S.S. Rajamouli is facing serious allegations following the suicide of his long-time friend and former collaborator, U. Srinivasa Rao, who was the executive producer of *Yamadonga*. Srinivasa Rao reportedly left a selfie videoand#Sikandar #ssrajmouli #SSRajamouli pic.twitter.com/dWYK2f1nOl
— Incognito news 🥸 (@raj894mandal) February 27, 2025
அந்தக் கடிதத்தில், சமூகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ராஜமவுலி இந்த விவகாரத்தையும், தன்னுடைய மரண வாக்குமூலத்தையும் குழி தோண்டிப் புதைத்து விடுவார் எனவும் சீனிவாச ராவ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் 34 ஆண்டு கால நண்பர்களான ராஜமவுலிக்கும் சீனிவாசராவுக்கும் இடையில் நடந்தது என்ன? அதுபற்றி ராஜமவுலியிடம் போலீசார் விசாரணை நடத்துவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது தெலுங்கி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
March 02, 2025 5:21 PM IST
[]
Source link