
Last Updated:
தனுஷ் குபேரா படத்தில் யாசகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் மூன்றாவது பாடல் மும்பையில் வெளியிடப்பட்டது. ஷேகர் கம்முலா இயக்கியுள்ள படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா நடித்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “ஓம் நம சிவாய, எல்லோருக்கும் வணக்கம்’ என தமிழிலேயே தொடங்கி ‘மன்னிக்கனும் எனக்கு ஹிந்தி தெரியாது, இங்கிலீஸ் பேசுவன் அதுவும் அரைகுறையா தான் பேசுவன் பொறுத்துக்கோங்க.
நான் ஒரு பிச்சைக்காரனாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக நான் நிறைய ஆராய்ச்சியும், அதைசரியாக கொண்டுவர ஹோம்ஒர்க்கும் செய்தேன். வெயிலில் நிறைய கஷ்டப்பட்டேன், ஆனால் நான் சொன்ன இவை அனைத்தும் பொய். நான் எதுவும் இப்படி செய்யவில்லை.
நான் உண்மையில் எதையும் செய்யவில்லை. நேராக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று என் இயக்குனர் சொன்னதை அப்படியே செய்தேன். சேகர் சார் மிகவும் புத்திசாலி. அவர் எனக்கு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார். பேச்சுவழக்கு உட்பட என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் எனக்கு நேர்த்தியாகச் சொன்னார். அவர் எனக்கு என்னுடைய கதாபாத்திரத்தின் வாழ்க்கையை எளிதாக்கினார்.
குபேரா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். என்னுடைய ஏழ்மையான கடந்த காலங்களுக்கு மீண்டும் என்னை அழைத்துச்சென்றது. நான் அடிக்கடி இப்படி புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை, ஆனால் குபேரா இப்படி விளம்பரப்படுத்தப்படுவதற்கு தகுதியான திரைப்படம்.

ஒரு குப்பை கிடங்கில் நானும் – ரஷ்மிகாவும் கிட்டத்தட்ட 6 மணிநேரம் நடித்தோம். அவர் நன்றாகவே இருந்தார், அவருக்கு எந்தவிதமான ஸ்மெல்லும் இல்லாமல் நன்றாகவே மணக்கமுடிகிறது என்று கூறினார். ஆனால் குபேரா உலகத்தின் இன்னொரு பக்கத்தை நெருங்கி பார்க்க உதவியது. என்னுடைய தொடக்கமும் அப்படியான ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்ததுதான்” என்றார். இந்த படம் வரும் 20 ஆம் தேதி தமிழ், தெலுங்கில் உள்ளிட்ட மொழியகளில் வெளியாக இருக்கிறது.
June 10, 2025 10:02 PM IST
[]
Source link