அப்போது அவர் கூறுகையில், தமிழக சட்டப்பேரவையில் துணை வேந்தர்கள் மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை தயார் செய்து இருக்கிறார். பாஜக இந்த மசோதாவை அங்கேயே எதிர்த்தது. திமுக அரசு துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாக அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கும் கொடுக்கும் பதவியாக வைத்து உள்ளது. திமுக இதற்கு முன்பே துணை வேந்தர்களை எந்த அளவிற்கு வியாபாரமாக மாற்றி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
பல நல்ல துணை வேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். இருப்பினும் ஆளுநரே எந்த துணை வேந்தர்களையும் நேராக நியமனம் செய்யவில்லை. தேர்வுக் குழுவின் பரிசீலனையிலும் இது நடைபெறுகிறது. இதில் மாநில அரசின் தலையீடும் உள்ளது.
இந்த செயல் திமுக அரசியல் காழ்புணர்ச்சியுடன் இதை நடைமுறை செய்கிறது என்று அண்ணாமலை விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எச்.ராஜா கேரளா ஆளுநராக வர உள்ளாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. நான் தேர்வுக் குழுவில் இல்லை.
இருப்பினும் எச்.ராஜா ஒரு நல்ல மனிதர். அவருக்கு கவர்னர் பதவி கிடைத்தால் சந்தோஷமே என்று தெரிவித்தார்.
அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் ஆளுனருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கூறிய விஷயத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் பல்வேறு அரசியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எல்லாம் விடுதலை சிறுத்தை கட்சி நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அண்ணாமலை
பின்னர் மேடையில் பேசிய அண்ணாமலை, நான் 40 ஆண்டு காலம் அனுபவத்துடன் ஐபிஎஸ் ஆக உள்ளேன் என்று தெரிவிக்கும் நபருக்கும் குரூப் 4 புதிதாக இருக்கும். குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் புதிதாக உள்ளன. காலம் வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. குரூப் 4 தேர்வில் காலி இடங்கள் 7,500 மட்டுமே உள்ளன. ஆனால், எழுதும் நபர்கள் 2 லட்சம் பேர்கள் உள்ளார்கள் என்று நினைப்பது குறுகிய மனப்பான்மை. ஆனால் இந்த பரிட்சையை நீங்கள் முழுமனதுடன் அணுக வேண்டும்.
நீங்கள் எவ்வளவு கஷ்டப்படக்கூடிய பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவித்தாலும், நான் அதை விட கஷ்டப்பட்டும் நபர்களை காண்பிப்பேன். இந்த சிலபஸ் எல்லாராலும் தேர்ச்சி அடையும் அளவிற்கே வடிவமைக்கப்பட்டு உள்ளது. சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவதே மிக முக்கியமான ஒன்று.
April 26, 2022 12:21 PM IST





