
Last Updated:
உதயநிநி தேர்தலில் நின்று ஜெயித்தவர், அவரை எப்படி பிறப்பால் முதல்வரானவர் என சொல்ல முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மேனாள் நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார்.
இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “கருத்தியல் சிந்தனை கொண்ட ஒருவர் தான் முதலமைச்சராக வர வேண்டும். பிறப்பால் ஒருவர் முதல்வராக வரக்கூடாது. மன்னர் பரம்பரையை உருவாக்க இனி தமிழகம் ஒருபோதும், இடம் தராது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. இன்று மன்னர் பரம்பரையை ஒழிப்பதற்கு அம்பேத்கரின் சிந்தனைகள் நமக்கு தேவைப்படுகிறது. 2026 தேர்தலுக்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்.” என்று திமுகவை தாக்கும் விதமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்படும். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்து அவருடைய சொந்த கருத்து. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை நான் சுதந்திரமாக தான் முடிவெடுத்தேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஆதவ் அர்ஜூனாவின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். கோவையில் அமமுக செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உதயநிநி தேர்தலில் நின்று ஜெயித்தவர். அவரை எப்படி பிறப்பால் முதல்வரானவர் என சொல்ல முடியும். தேர்தலி்ல் மக்களை சந்தித்து வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது. எல்லலா கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொல்வது வழக்கமானது. இதை ஆணவம் என்று சொல்வது சரியாக இருக்காது. திமுகவிற்கு ஆதரவாக பேசுகின்றேன் என நினைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
அம்பேத்கர் புத்தக வெளியீடு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.” என்று பேசியிருந்தார்.
Coimbatore,Tamil Nadu
December 07, 2024 5:42 PM IST
[]
Source link