உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Trump warns Russia of 100% tariffs if it doesnt stop the war Ukraine in 50 days

Spread the love


வாஷிங்டன்: ரஷ்யா – உக்​ரைன் இடையி​லான போர் 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக நீடித்து வரு​கிறது. அமெரிக்க அதிப​ராக கடந்த ஜனவரி​யில் பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப் இரு நாடு​கள் இடையே போரை நிறுத்த சமரச முயற்​சிகளை தொடங்​கி​னார். எனினும் அவரது முயற்சி வெற்றி பெற​வில்​லை.

இந்​நிலை​யில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அடுத்த 50 நாட்​களுக்​குள் உக்​ரைனுடன் போர் நிறுத்​தத்​திற்கு புதின் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்​கப்​படும். புதின் மீது நான் மிக​வும் அதிருப்​தி​யில் இருக்​கிறேன். தான் சொல்​லும் விஷ​யங்​களை செய்​யக்​கூடிய நபராக அவரை நான் நினைக்​க​வில்​லை. அவர் மிக​வும் அழகாக பேசு​வார்.

ஆனால் இரவில் மக்​கள் மீது குண்​டு​களை வீசு​வார். ரஷ்​யா​வுக்கு எதி​ரான போரில் உக்​ரைனை ஆதரிக்​கும் நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா பேட்​ரி​யாட் ஏவு​கணை அமைப்​பு​கள் மற்​றும் பேட்​டரி​களை அனுப்​பும்.​

இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.





Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *