இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரம்: மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்; தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள்  | Israel-Iran war intensifies

Spread the love


டெல் அவிவ்: இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. எண்​ணெய் வயல்​கள் நாச​மாகின. இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் நடத்​திய பதில் தாக்​குதலில், இஸ்​ரேலில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இரு தரப்​பிலும் நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​தனர்.

அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் தேதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. நாட்​டின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், ராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடித்​தது. இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் 150 ஏவு​கணை​களை வீசி​யது. இதில் பெரும்​பாலான ஏவு​கணை​கள் நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. எனினும், சில ஏவு​கணை​கள் இஸ்​ரேல் பகு​தி​களில் விழுந்​தன. இஸ்​ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின்​மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இஸ்​ரேலின் வேறு சில பகு​தி​கள் மீதும் ஏவு​கணை​கள் விழுந்​தன.

‘ஈரான் தாக்​குதலில் இஸ்​ரேலில் இது​வரை 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​துள்​ளனர். இஸ்​ரேலின் ஹனிபா நகரில் உள்ள எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது’ என்று இஸ்​ரேல் அரசு வட்​டாரங்​கள் கூறின. ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் அந்த நாட்​டின் அணுசக்தி தலை​மையகம் உள்​ளது. இதை குறி​வைத்து இஸ்​ரேல் ட்ரோன்​கள் நேற்று தாக்​குதல் நடத்​தின. இதில் அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. தெஹ்​ரான், பூசெகர் பகு​தி​களில் உள்ள எண்​ணெய் வயல்​கள் மீது இஸ்​ரேலின் ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்​தின. இதில், எண்​ணெய் வயல்​கள் தீப்​பிடித்து எரிந்​தன. ஈரானின் ராணுவ முகாம்​கள் உட்பட 150 இடங்​களை குறி​வைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள், ட்ரோன்​கள் தாக்​குதலை நடத்​தின.

‘இஸ்​ரேல் ராணுவ தாக்​குதலில் ஈரான் முழு​வதும் இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். இஸ்​ரேல் தொடர்ச்​சி​யாக தாக்​குதல் நடத்​து​வ​தால், மெட்ரோ ரயில் நிலை​யங்​கள், சுரங்​கப் பாதைகளில் பாது​காப்​பாக இருக்​கு​மாறு மக்​களை அறி​வுறுத்தி உள்​ளோம்’ என்று ஈரான் அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறும்​போது, ‘‘இஸ்​ரேலுக்கு எதி​ராக ஒட்​டுமொத்த முஸ்​லிம் நாடு​களும் ஓரணி​யில் திரள வேண்​டும். அப்​போது​தான் இஸ்​ரேலின் சதி​களை முறியடிக்க முடி​யும். அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு நாங்​கள் ஒரு​போதும் அடிபணிய மாட்​டோம்’’ என்று உறுதிபட தெரி​வித்​தார்.

இஸ்​ரேல் ராணுவம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘ஈரான்மக்​களுக்கு எதி​ராக நாங்​கள் போரிட​வில்​லை. ஈரானின் கொடுங்​கோல் ஆட்​சிக்கு எதி​ராகவே போரிடு​கிறோம். ஈரான் ராணுவ முகாம்​களுக்கு அரு​கில் வசிக்​கும் மக்​கள் பாது​காப்​பான இடங்​களுக்கு செல்​லு​மாறு கேட்​டுக் கொள்​கிறோம்’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘இஸ்​ரேல் – ஈரான் இடையி​லான போர் தீவிரமடைந்து வரு​கிறது. இதனால், மத்​திய கிழக்கு நாடு​களில் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. ஈரானுக்கு பக்​கபல​மாக ரஷ்​யா, சீனா, வடகொரி​யா, துருக்கி உள்​ளிட்ட நாடு​கள் அணிவகுத்​துள்​ளன. இஸ்​ரேலுக்கு ஆதர​வாக அமெரிக்கா​வும், ஐரோப்​பிய நாடு​களும் ஓரணி​யில் திரண்​டுள்​ளன. இந்த சூழலில், இஸ்​ரேல் – ஈரான்​ இடையே போர்​ நீடிப்​பது, மூன்​றாம்​ உலகப்​போருக்​கு வித்​திடும்​’’ என்​று அச்​சம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை: இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப், வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை. மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தினால், எங்கள் முழுபலத்தோடு ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம். மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்கும். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். நைல் நதி விவகாரத்தில் எகிப்து – எத்தியோப்பியா இடையே சமரசம் ஏற்படுத்தினேன். அதேபோல, இஸ்ரேல் – ஈரான் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தி போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எங்களால் முடியும். இஸ்ரேல் – ஈரான் இடையே பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. மத்திய கிழக்கை மீண்டும் வலுப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





Source link


Spread the love
  • Related Posts

    Slot Depo 10K Dana Qris: Modal Kecil, Hadiah Fantastis

    Spread the love

    Spread the love     Dalam era digital seperti sekarang, permainan slot online telah menjadi salah satu bentuk hiburan yang tidak hanya seru, tetapi juga berpotensi memberikan keuntungan nyata. Salah satu tren yang…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *