
Last Updated:
பல துறைகளில் சிறந்து விளங்குவோரை கவுரவிக்கும் cnn news18-ன் indian of the year விருது, பொழுதுபோக்குத்துறையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் இந்திய பிரபலங்களை பெருமை படுத்தும் வகையில் சிஎன்என் நியூஸ் 18 இந்தியன் ஆப்தி இயர் என்ற விருதை அளித்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் சிறந்த பிரபலங்களை தேர்வு செய்து விருதளிக்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
பலதுறை பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பழம்பெறும் பாலிவுட் இயக்குநர் ரமேஷ் சிப்பி பொழுதுபோக்குத்துறைக்கான விருதை அறிவித்தார். அதில் சினிமா துறையில் பெரும்பாலனவர்களின் தேர்வாக நடிகர் விஜய் சேதுபதிக்கு விருது அறிவிக்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்ட விஜய் சேதுபதி சிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தி சினிமாக்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருவதாக பேசிய விஜய் சேதுபதி, மகாராஜா படத்தின் இயக்குநர் நிதிலனை பாராட்டினார். நடிகர்களை விட கதைகளை சொல்பவர்கள்தான் மிகவும் முக்கியமானவர்கள் என்றும் குறிப்பிட்டார். விரைவில் திரைப்படத்தை இயக்குவீர்களா என்ற கேள்விக்கு சினிமாவில் மிகவும் நுணுக்கமான விஷயங்களை கற்று வருவதாகவும், தாம் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் பேட்டியளித்த விஜய் சேதுபதி, தாம் திரையில் நடித்த படங்களில் ஒரு கதாப்பாத்திரமாக ஒரு நாள் வாழ வேண்டுமெனில் எந்த கதாப்பாத்திரத்தை தேர்வு செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் சுமார் மூஞ்சி குமார் கதாப்பாத்திரத்தை குறிப்பிட்டார்.
அண்மையில் வெளியான எந்த படம் தனது விருப்பமான படம் என்ற கேள்விக்கு தமக்கு அனைத்து படங்களும் பிடிக்கும் என்றும், குறிப்பிட்டு ஒரு படத்தை கூற முடியாது என்றும் கூறினார். இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட தம்மை மாற்றியது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா படத்தில் வரும் குமார் கதாப்பாத்திரம்தான் என்று அவர் குறிப்பிட்டது அவரின் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.
January 18, 2025 8:38 AM IST
[]
Source link