
Last Updated:
“இந்தி சினிமா ஆரம்பத்திலிருந்தே பாடல்களையும் கதைகளையும் திருடி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இருந்து அதிகம் காப்பி அடித்திருக்கிறோம்” என பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
“இந்தி சினிமா ஆரம்பத்திலிருந்தே பாடல்களையும் கதைகளையும் திருடி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இருந்து அதிகம் காப்பி அடித்திருக்கிறோம்” என பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழில் வெளியான ‘பேட்ட’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நவாசுதீன் சித்திக். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறுகையில், “இந்தி சினிமாவில், கதைகளுக்கான முக்கியத்துவமும் படைப்பாற்றலும் இல்லை.
அவை தென்னிந்திய திரைப்படங்களில் இருந்து நகலெடுக்கப்பட்ட கதைகளையே அதிகம் சார்ந்திருக்கின்றன. இந்தியில், கடந்த 5 வருடங்களாக ஒரே மாதிரியான கதைகள்தான் திரும்பத் திரும்ப எடுக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் மக்கள் சலிப்படைந்ததும் அதை விட்டுவிடுகிறார்கள்.
பாலிவுட்டில் பாதுகாப்பின்மையை பார்க்க முடிகிறது. ஒரே பார்முலா தான். அது வெற்றி பெற்றால் அதையே படமாக எடுக்க முயல்கின்றனர். அதன் 2, 3, 4-ம் பாகங்கள் என உருவாக்கப்படுகின்றன. இது நிதி திவால் போல, படைப்பு திவால் நிலை. படைப்புத் திறன் வறுமை என்றும் சொல்லலாம்.
இந்தி சினிமா ஆரம்பத்திலிருந்தே பாடல்களையும் கதைகளையும் திருடி வருகிறது. திருடுபவர்கள் எப்படி படைப்பாற்றல் கொண்டவர்களாக இருக்க முடியும்? தென்னிந்திய சினிமாவில் இருந்து அதிகம் காப்பி அடித்திருக்கிறோம். சில பிரபலமான படங்களில் இருந்தும் காப்பி அடித்துள்ளனர். இது மிகவும் இயல்பாகிவிட்டது” என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
[]
Source link