
Last Updated:
தமிழிசை சௌந்தரராஜன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த முயன்றார். காவல்துறை அனுமதி மறுத்ததால், பாஜக சாலை மறியலில் ஈடுபட்டது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கின்றது. அதனை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களிடம் கையெழுத்து பெற திட்டமிட்டு இருந்தார். ஆனால், காவல்துறை அவர் பொதுமக்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சௌந்தரராஜன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, காவல்துறையினர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதிக்காததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் காவல்துறையினர் தமிழிசை சௌந்தரராஜன் நிற்க வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இறுதியாக காவல்துறையினர் பொதுமக்கள் சிலரிடம் கையெழுத்து பெற அனுமதி அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பாமர மக்களுக்கும் சம கல்வி கிடைக்க வேண்டும் என்கிற தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
அனைவருக்குமான வாய்ப்பை மறுக்கும் முதலமைச்சர் அப்டேட் ஆக இல்லாமல் அவுட்டேட்டாக இருப்பதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனத்தை முன் வைத்தார்.
சமஸ்கிருதத்தை திணிக்கவே ஹிந்தியை கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக முதலமைச்சரின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், அது போன்று இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்ட நிலையிலும் அதனையே திமுக தொடர்ந்து கூறி வருவதாக கூறினார்.
March 06, 2025 4:20 PM IST
[]
Source link