
கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோவை குற்றாலத்துக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றால அருவியில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மழை காரணமாக தற்காலிகமாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் தடை நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.