அதிக சப்தமெழுப்பும் ஹாரன், சைலெண்சர், தவறான நம்பர் பிளேட்டுகள்… 2 நாட்களில் 1600 க்கும் மேற்பட்ட வழக்குகள் | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

Chennai : சென்னையில் அதிக சப்தமெழுப்பும் ஹாரன் மற்றும் சைலெண்சர், தவறான நம்பர் பிளேட்டுகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, சென்னை போக்குவரத்து காவல்துறையினர் இரண்டு நாட்களில் 1600 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

அதிக சப்தமெழுப்பும் ஹாரன்அதிக சப்தமெழுப்பும் ஹாரன்
அதிக சப்தமெழுப்பும் ஹாரன்
சென்னையில் வாகன விபத்துகளை குறைப்பதற்காகவும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான வாகனங்கள் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் பதிவு எண் தகடு (Registration Number Plates) மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாகவும் (Defective Number Plates), குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டு வாகனம் இயக்கி விதி மீறல்களில் ஈடுபடும் போதும், விபத்துக்கள் ஏற்படுத்தும் போதும் அவற்றை கண்டறிய போக்குவரத்து போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதனை தவிர்ப்பதத்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு வாகன தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே 1 ம் தேதி சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். இந்த சிறப்பு நடவடிக்கையில் குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் (defective Number Plate) கொண்ட 821 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டு வாகனம் ஓட்டியதாக 9 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மேலும், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (No Parking) 215 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக மே 1 ம் தேதி நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில் 1,036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2ம் தேதி நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன், மியூசிக்கல் ஹாரன், அதிக ஒலியெழுப்பும் சைலெண்சர், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் மீறி வாகன பதிவெண் தகடு பொறுத்தி வாகனம் இயக்கிய 607 நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வாகன சோதனை

குறிப்பாக அதிக சப்தம் எழுப்பும் ஹாரம் பயன்படுத்தியதாக 163 வழக்கு பதிவுகளும், மியூசிகல் ஹாரன் பயன்படுத்தியதாக 17 வழக்கு பதிவுகளும், அதிக சப்தமெழுப்பும் சைலெண்சர் பயன்படுத்தியதற்காக 103 வழக்கு பதிகவுகளும், விதிகள் மீறி வாகன பதிவெண் பயன்படுத்தியதற்காக  291 வழக்குகள் என மொத்தம் 607 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதிக சப்தமெழுப்பும் ஹாரன்



Source link


Spread the love
  • Related Posts

    Link Alternatif Trisula88: Solusi Login Tanpa Gangguan

    Spread the love

    Spread the love     Di era digital saat ini, platform judi online semakin banyak diminati oleh berbagai kalangan. Salah satu situs judi online yang cukup populer adalah Trisula88. Situs ini menawarkan berbagai…


    Spread the love

    முத்துக்குடா கடற்கரை சுற்றுலா தலம் திறப்பு – படகு சேவையும் தொடக்கம் | Muthukuda Beach Tourist Spot Opened and Boat Service Also Commences

    Spread the love

    Spread the love      புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் முத்துக்குடாவில் ரூ.3.06 கோடியில் படகு குழாம், பார்வையாளர் கூடம், நிர்வாகக் கட்டிடம், வாகன நிறுத்துமிடம், நடை பாதை, குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் கடற்கரை சுற்றுலாத்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *