அஜித் பட நடிகை மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு.. என்ன நடந்தது?

Spread the love


Last Updated:

பிரபல சின்னத்திரை நடிகை ஷர்மிளா தாபா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

நடிகை ஷர்மிளா தாபா நடிகை ஷர்மிளா தாபா
நடிகை ஷர்மிளா தாபா

பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக பிரபல சின்னத்திரை நடிகை ஷர்மிளா தாபா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் ஷர்மிளா தாபா. அதன்பின் அந்த புகழை வைத்து விஸ்வாசம், வேதாளம், சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த இவர், தனியார் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.  நேபாளத்தை சேர்ந்த இவர் நடன உதவி இயக்குனர் ரகு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மீது தற்போது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அளித்த முகவரியில் முறைகேடு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த இவர், கடந்த 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் அண்ணா நகர் முகவரியின் ஆவணங்களைக் கொடுத்து இந்தியன் பாஸ்போர்ட் பெற்று வைத்திருந்தார். அந்த பாஸ்போர்ட் தற்போது காலாவதியான நிலையில் மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஆட்டோவில் தனியாக பயணிப்பவர்கள் தான் ஸ்கெட்ச்… சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்… வெளியான அதிர்ச்சி பின்னணி!

தற்போது அவர் வியாசர்பாடியில் வசித்து வருவதால், தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வியாசர்பாடி முகவரியைக் கொடுத்திருக்கிறார். இதில் முறைகேடு இருப்பதாக கருதிய உள்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் மோசடி வழக்கை இவர் மீது அளித்துள்ளனர். அதனை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை தாபா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    “பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான்” – பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி!

    Spread the love

    Spread the love      Last Updated:April 26, 2025 10:10 PM IST “ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் என சொல்ல வேண்டாம். அங்கிருப்பவர்களும் மனிதர்கள் தான் நாமும் மனிதர்கள் தான்” என பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.  News18 “ஒட்டுமொத்தமாக…


    Spread the love

    மைன்கிராஃப்ட் திரைப்படத் திரையிடலின்போது ரசிகர்கள் பட்டாசு வெடித்தார்களா…? உண்மை என்ன…?

    Spread the love

    Spread the love      Last Updated:April 24, 2025 12:56 PM IST கூட்ட நெரிசல் கொண்ட திரையரங்கு ஒன்றில் பட்டாசு வெடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. News18 மாஸ் ஹீரோக்களின் படம் வெளியானால், முதல் நாளில் ரசிகர்கள் ஆரவாரம்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *