‘லொள்ளு சபா’ பிரபலம் நடிகர் வெங்கட்ராஜ் காலமானார் – தமிழ் சினிமாவில் சோகம்…! | பொழுதுபோக்கு

Spread the love


Last Updated:

லொள்ளு சபா பிரபலம் வெங்கட்ராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். மனிதன், மெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் மறைவு தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியது.

News18
News18

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘லொள்ளு சபா’ மூலம் சிரிக்க வைத்த நடிகர் வெங்கட்ராஜ் காலமானார். அவருக்கு வயது 70.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி இன்றும் பலரது ஃபேவரைட். சந்தானம், யோகி பாபு எனப் பல முன்னணி நடிகர்களை உருவாக்கிய இந்த நிகழ்ச்சியில், தனது எதார்த்தமான நடிப்பால் மக்களைக் கவர்ந்தவர் நடிகர் வெங்கட்ராஜ்.

தனது உடல் மொழி மற்றும் சரியான ‘டைமிங்’ நகைச்சுவை மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். இவருடைய காமெடி ஸ்கிட்டுகள் இன்றும் இணையத்தில் வைரலாக உள்ளன. சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்தார்.

மெட்ரோ, சைத்தான், டிக்கிலோனா, டாகால்டி போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். வெங்கட்ராஜ் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை உணர்ந்து நடிக்கக்கூடிய திறமைசாலி. அவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாகப் பலரும் அவருக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    23 வயதான நடிகை.. பிரபலத்தின் 3-வது மனைவியாக இருக்க அழைப்பு.. ரூ.11 லட்சம் சம்பளம்.. யார் இவர்? | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      சினிமா நடிகைகளுக்கு திரையுலகத்திலிருந்தும், வெளியிலிருந்தும் பல அழுத்தங்களும், பாலியல் நெருக்கடிகளும் கொடுக்கப்படுவது தீராத பிரச்சினை. சிலர் இதனை ‘மீடு’ இயக்கங்களாக வெளியில் தைரியமாக பேசிவிடுகின்றனர். பலர் எதிர்காலத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் தங்களுக்கு…


    Spread the love

    8 தேசிய விருதுகள்.. 50,000 பாடல்கள் 6 தலைமுறை.. ‘இனி தனக்கு விருது வேண்டாம்’ என்று அறிவித்த பாடகர் யார்? | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 12, 2026 2:09 PM IST இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா மற்றும் ஆங்கிலம், அரபு, லத்தீன் மற்றும் ரஷ்ய மொழிகள் உட்பட 50,000 பாடல்கள் பாடிய பாடகர் யார்? []…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *