பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு வழக்கு: இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Spread the love


Last Updated:

திருவிடைமருதூர் கோயிலில் அனுமதியின்றி வேட்டுவம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக வழக்கு, இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

வேட்டுவம்வேட்டுவம்
வேட்டுவம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கோயிலில், உரிய அனுமதியின்றி வேட்டுவம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு, திருவிடைமருதூர் கோயிலில் 4 நாட்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த போது, உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக மனுதாரர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மனு குறித்து, மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ’தங்கலான்’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, ‘கெத்து’ தினேஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் காட்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் குடும்பத்துக்கு பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். முன்னதாக சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

[]

Source link


Spread the love
  • Related Posts

    “வாழ்நாள் முழுவதும் உன் அருகில் நான்…” – 10வது திருமண நாள்… அசினின் கணவர் நெகிழ்ச்சி! | பொழுதுபோக்கு செய்திகள்

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 8:40 PM IST மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். News18…


    Spread the love

    Bigg Boss 9 Title Winner | பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளியான கணிப்பு! | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      தொடர்ந்து 6 பேர் ஃபினாலேவிற்கு தகுதி பெற்ற நிலையில் வினோத் ரூ.18 லட்சத்துடன் பெட்டியை எடுத்து வெளியேறினார். அதே போல், சாண்ட்ரா எவிக்‌ஷன் செய்யப்பட்டார். கடைசியாக சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, திவ்யா ஆகிய 4 பேரும்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *