நான் அரசுப் பள்ளியில் படித்தேன் என் மகள் லண்டனில் படிக்கிறார் – ஆ.ராசா

Spread the love


Last Updated:

Dravidian Model : முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடலுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக திகழ்வதாக, திருவொற்றியூரில் நடந்த திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா கூறினார்.

ஆ.ராசாஆ.ராசா
ஆ.ராசா

சென்னை திருவொற்றியூரில் திராவிட மாடல் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, தமிழக முதல்வர் திராவிட மாடலுக்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என்றும் பெண்களுக்காக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ள ஒரே முதல்வர் என்றும் கிராமங்களில் பெண்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு பயந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலும் பெண்கள் மேன்மேலும் பயில்வதற்காக ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

தான் அரசு பள்ளியில் பயின்றதாக கூறிய ஆ.ராசா, தலைவர்களின் நல்லாட்சியில் தனது மகள் இன்று லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார் என்றும், இதற்கு முழு முதற் காரணம் திராவிட மாடல் தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

அன்று கலைஞர் இலவச மருத்துவத்தை ஊக்குவித்தார் இன்று அவரது மகன் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து வீடுகளுக்கே சென்று மருத்துவத்தை பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதுவே மிகப் பெரிய திராவிட மாடல் என்றும் கூறினார்.

மேலும், நீட்  தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாகவும், முந்தைய ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் நீட்தேர்விற்காக என்ன செய்கிறார் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கூறிய ஆ.ராசா, இங்கு நடைபெறும் பொதுக்கூட்டம் திராவிட மாடலுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

Must Read : சதுரங்க வேட்டை பட பாணியில் பணம் இரட்டிப்பு.. ஆரணியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனம் – ஆக்‌ஷனில் இறங்கிய வருவாய்துறை

கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மாதாவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மற்றும் மண்டல குழு உறுப்பினர் தனியரசு மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மழை தூரல் பெய்துகொண்டிருந்த நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஏராளமானோர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மழையில் நனைந்தவாறு கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – அசோக்குமார்.



Source link


Spread the love
  • Related Posts

    அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:December 10, 2025 10:20 PM IST 11ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. News18 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நாளை (11ஆம் தேதி)…


    Spread the love

    Anant Ambani : மனிதாபிமான பணிகளுக்காக சர்வதேச விருது வென்ற ஆனந்த் அம்பானி.. ஆசியாவின் முதல் நபராக கவுரவம்… | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Last Updated:December 08, 2025 9:28 PM IST விலங்குகள் நமக்கு சமநிலையை கற்பிக்கின்றன. அவற்றிலிருந்து பணிவையும் நம்பிக்கையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். விருதுகளுடன் ஆனந்த் அம்பானி மனிதாபிமான பணிகளுக்கான சர்வதேச விருதினை வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *