நாட்டில் பிரபலமாகி வரும் ஆன்மிக சுற்றுலா: திருப்பதி, திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள் | Spiritual tourism is becoming popular in the country

Spread the love


புதுடெல்லி: ​நாட்​டில் தற்​போது ஆன்மிக சுற்​றுலா பிரபல​மாகி வருகிறது. அயோத்​தி, வாராணசி, திருப்​ப​தி, திருச்​செந்​தூர் போன்ற புண்​ணி​யத் தலங்​களுக்கு பொது​மக்​கள் படையெடுத்து வரு​கின்​றனர். நமது நாட்​டில் உள்ள புண்​ணி​யத் தலங்​களுக்கு ஆண்​டு​தோறும் சென்று கடவுள்​களை வணங்கி வரு​வதை இந்​துக்​கள் வழக்​க​மாகக் கொண்​டுள்​ளனர்.

ஆனால், கடந்த சில ஆண்​டு​களாக புண்​ணி​யத் தலங்​களுக்கு பொது​மக்​கள் செல்​வது அதி​கரித்​துள்​ளது. மதச்​சுற்​றுலா என்ற பெயரில் பொது​மக்​கள் அதிக அளவில் புண்​ணி​யத் தலங்​களுக்​குச் சென்று வரு​கின்​றனர் என்​பது புள்ளி விவரங்​களின் மூலம் தெரிய​வந்​துள்​ளது.

நாட்​டில் உள்ள பிரபல சுற்​றுலா வழி​காட்டி நிறு​வன​மான மேக் மை டிரிப் நிறு​வனம் கொடுத்​துள்ள தகவல்​களின்​படி 2024-25-ம் ஆண்​டில் வாராணசி, அயோத்​தி, திருப்​ப​தி, திருச்​செந்​தூர் உள்​ளிட்ட 56 புண்​ணி​யத் தலங்​களுக்கு சென்று வர பொது​மக்​கள் அதிகளவில் ஆர்​வம் காட்​டி​யுள்​ளனர். கடந்த 2023-24-ம் ஆண்​டைக் காட்​டிலும் இது 19 சதவீதம் அதி​க​மாகும்.

மேலும் கடந்த ஆண்​டைக் காட்​டிலும் கூடு​தலாக 15 புண்​ணி​யத் தலங்​களுக்​குச் சென்று அவர்​கள் முன்​ப​திவு செய்​துள்​ளனர். இது 25 சதவீத வளர்ச்​சி​யாக உள்​ளது. அங்​குள்ள ஓட்​டல்​கள் போன்​றவற்றை முன்​ப​திவு செய்​வ​தில் அவர்​கள் ஆர்​வம் காட்டி வருகின்றனர்.

அதே​போல ஒரு குழு​வாக சுற்​றுலா சென்று வரு​வதும் அதி​கரித்​துள்​ளது. குடும்​பம், நண்​பர்​கள் குழு அல்​லது கம்​யூனிட்டி குழு என்ற பெயரில் குழுக்​களாக பொது மக்​கள் மதச் சுற்​றுலா​வுக்​குச் செல்​வதும் அதி​கரித்​துள்​ளது.

முன்​ப​திவு செய்​யப்​படும் சுற்​றுலாக்​களில் 47 சதவீதம் பேர் குழுக்​களாகச் சென்று வரு​வதும் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. அதே​போல் ஓட்​டலில் ஒரு​நாள் வாடகை ரூ.7 ஆயிரத்​துக்​கும் அதி​க​மாக உள்​ளவற்றை பொது​மக்​கள் முன்​ப​திவு செய்​வது 20 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

மேக் மை டிரிப் நிறு​வனத்​தின் இணை நிறு​வனரும், குழு தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான ராஜேஷ் மேகவ் கூறும்​போது, “நமது நாட்​டில் புனிதப் பயணம் எப்​போதுமே கலாச்​சா​ரத்​தின் ஒரு பகு​தி​யாக இருந்து வரு​கிறது. ஆனால், தற்​போது இந்​தியா முழு​வதும் புனிதப் பயணம் செல்​வோர் அதி​கரித்து வரு​வதை நாம் காண முடிகிறது.

இவ்​வாறு புனிதப் பயணம் மேற்​கொள்​ளும் சுற்​றுலாப் பயணி​களுக்​காக புது​மை​களை உரு​வாக்​க​வும் நாம் முற்​படு​கிறோம்’’ என்​றார். அயோத்​தி, வாராணசி, திருப்​பதி போன்ற புண்​ணி​யத் தலங்​கள் மட்​டுமல்​லாமல் பிர​யாக்​ராஜ், புரி, அமிர்​தசரஸ், கதுஷி​யாம் ஜி, ஓம்​காரேஸ்​வர், திருச்​செந்​தூர் உள்​ளிட்ட புண்​ணி​யத் தலங்​களுக்​கு செல்​லும்​ பக்​தர்​களும்​ அதி​கரித்​து வரு​கின்​றனர்​.





Source link


Spread the love
  • Related Posts

    அமெரிக்காவில் 43 நாட்கள் நீடித்த நிதி முடக்கம் முடிவுக்கு வந்தது: மசோதாவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்! | 43 day long financial freeze in the United States ended Trump signed the bill

    Spread the love

    Spread the love      வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30-ல்…


    Spread the love

    Exciting u31 Games at Leading Thailand Casino

    Spread the love

    Spread the love     The world of on the internet gambling enterprises is huge and interesting, with u31 games being one of the most thrilling experiences available to players in Thailand. At…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *