தேர்வுக்கு செல்ல மறுத்து பள்ளி மாணவர் தற்கொலை…

Spread the love


Last Updated:

தூக்கத்திலிருந்த ஹரிஷ் தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனவும் பரீட்சை எழுத மாட்டேன் எனவும் தாயிடம் சொல்லி உள்ளதாக தெரிகிறது.

மாணவர் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமி (47) என்பவர் தனது கணவர் ராஜாவை கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து மகன் ஹரிஷ் (15) உடன் வசித்து வருகிறார். ஹரிஷ் கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்த ஹரிஷை காலாண்டு தேர்வு உள்ளதால் நேரத்தில் பள்ளிக்குச் செல்லுமாறு தாய் சுமி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தூக்கத்திலிருந்த ஹரிஷ் தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனவும் பரீட்சை எழுத மாட்டேன் எனவும் தாயிடம் சொல்லி உள்ளதாக தெரிகிறது. இதனால் தாய் கோபத்தில் தனது மகனை எழுப்பி விட ஹரிஷுக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

சென்னையில் பிரசவ வலி மாத்திரையை போதைப் பொருளாக பயன்படுத்திய கும்பல் கைது…

பின் ஆத்திரமடைந்த ஹரிஷ் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த கட்டிட காவலாளி, ஹரிஷின் தாய் சுமிக்கு தகவல் தெரிவித்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயமடைந்த ஹரிஷை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு ஹரிஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹரிஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் ஹரிஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விருந்துக்கு சென்ற இடத்தில் விபரீதம்.. புதுமண தம்பதி தற்கொலை.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கத்திலிருந்து எழுப்பி பள்ளிக்கு செல்ல சொன்னதால் தாயுடன் தகராறு ஈடுபட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்து பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050




Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *