சென்னையில் நடந்து சென்ற பெண்ணின் கையை வெட்டி செல்போன் பறிப்பு – 3 பேர் கைது

Spread the love


Last Updated:

Chennai | சென்னை காசிமேட்டில் நடந்து சென்ற பெண்ணை கத்தியால் கையை வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞர் பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞர்
பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞர்
சென்னை காசிமேட்டில் நடந்து சென்ற பெண்ணின் கையை கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பிரிண்டிங் அச்சகம் ஒன்றில் பணிபுரியும் கமலி (வயது 24 ) என்பவர் முத்தமிழ் நகர், தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்தவர்.  அச்சகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காசிமேடு கடற்கரை ஓரம் நடந்து சென்று  கொண்டிருந்த பொழுது இரவு நேரத்தில் கமலியை மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் கமலியின் கையில் கத்தியால் வெட்டி விட்டு அவரது கையிலிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமலி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *