சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட சென்னை ஒன் செயலி.. 1 ரூபாயில் இனி பயணிக்கலாம்! டிக்கெட் வாங்கு எப்படி தெரியுமா? | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

Chennai One செயலியில் பஸ், மெட்ரோ, புறநகர் ரயில் டிக்கெட்டுகள் BHIM Payments App அல்லது Navi UPI மூலம் ரூ.1-க்கு பெறும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

News18
News18

சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) “சென்னை ஒன்” செயலி: பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் டிக்கெட்டுகளை ரூ.1-க்கு வாங்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னைக்கான ஒரே முழுமையான தினசரி பயண செயலியாக “Chennai One” செயலி இருந்துவருகிறது. தமிழ்நாடு முதல்வர், கடந்த 22 செப்டம்பர் 2025 அன்று தொடங்கி வைத்த இந்தச் செயலி இப்போது, பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணிக்க BHIM Payments App அல்லது Navi UPI வழியாக பணம் செலுத்தும் பயணிகளுக்கு வெறும் ரூ.1-க்கு டிக்கெட் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த “One Rupee Ticket” சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் – அனைவரும் டிஜிட்டல் மற்றும் பணமில்லா (cashless) போக்குவரத்தை முயற்சிக்க ஊக்குவிப்பதாகும்.

இந்த செயலி சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு மாதத்திலேயே; 5.5 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்கள், 14 லட்சம் பயண தேடல்கள், 8.1 லட்சம் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.

பயணிகள் இந்த செயலியின் சுத்தமான வடிவமைப்பு, ஒரு QR குறியீட்டின் மூலம் பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்கள் மற்றும் காப் ஆகியவற்றை ஒரே இடத்தில் திட்டமிடுதல், பணம் செலுத்துதல், கண்காணித்தல் ஆகிய வசதிகளுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

“சென்னை ஒன் செயலி, நமது நகரின் போக்குவரத்தை வேகமான, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொருந்தியதாக மாற்றுகிறது. ரூ.1 சலுகையின் மூலம், பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே செயலியில் ஒரே கட்டண முறையில் பயணிக்க முடியும். இது தினசரி பயணத்தை எளிதாக்கி, டிஜிட்டல் பணப்பயன்பாட்டை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சி.” என மாநகரப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ரூ.1 டிக்கெட் பெறுவது எப்படி?

  1. Chennai One செயலியை திறந்து (அல்லது பதிவிறக்கி), பயண இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. BHIM Payments App அல்லது Navi UPI மூலம் ரூ.1 செலுத்தவும்.
  3. வெற்றிகரமாக டிக்கெட் பெறலாம்.

இந்த சலுகை ஒரு முறை பயணத்திற்கே பொருந்தும். மற்ற சலுகைகளுடன் இணைக்க முடியாது. ஒருமுறை வெற்றிகரமாக பயணித்த பிறகு, தொடர்ந்து வரும் பயணங்களுக்கான வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த சலுகை நவம்பர் 13, 2025 (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட இருக்கிறது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    Sollathigaram | ” நீதிபதி தெளிவா Order போட்டிருக்காரு” – G.K.Nagaraj | Thiruparankundram | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | ” நீதிபதி தெளிவா Order போட்டிருக்காரு” – G.K.Nagaraj | Thiruparankundram Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App – https://onelink.to/desc-youtube SUBSCRIBE – http://bit.ly/News18TamilNaduVideos????News18 Tamil Nadu 24/7…


    Spread the love

    Silent Killer | உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் மற்றும் கண்டறியும் முக்கிய தகவல்கள் | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      “உயர் இரத்த அழுத்தத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகளாக தலைவலி, மங்கலான பார்வை, மூச்சுத் திணறல், மார்பு வலி, மூக்கில் இரத்தப்போக்கு (எபிஸ்டாக்ஸிஸ்) மற்றும் நுரையுடன் கூடிய சிறுநீர் போன்றவை இருக்கும். இதில் முதல் அறிகுறி தலைவலிதான். இவையன்றி…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *