சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிமுக என்றும் இரட்டை வேடம் போட்டதில்லை – எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

ADMK : சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிமுக என்றும் இரட்டை வேடம் போட்டதில்லை என்றும், சிறுபான்மை மக்கள் நலனுக்காக வாய் சொல்லில் மட்டும் இல்லாமல் அதனை கடைபிடிக்கும் கட்சி அதிமுக  எனவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இஸ்லாமிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது என்று கூறினார். ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சார்பில் அரிசி வழங்கும் திட்டம் 2001 முதல்  தொடங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தன கட்டைகள் வழங்கியது என பல்வேறு நல திட்டங்களை அதிமுக அரசு வழங்கியது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், அதிமுக இரட்டை வேடம் போடவில்லை என்றும் சிறுபான்மை மக்கள் நலனுக்காக வாய்சொல் வீரர்களாக மட்டும் இல்லாமல் அதனை கடைப்பிடிக்கும் கட்சியாக அதிமுக உள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிவகுத்த பாதையில் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அதிமுக தொடர்ந்து செயல்படும் என்றார்.



Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *