சிபிஐ வழக்கை மாற்ற ராஜேந்திர பாலாஜி மனு : சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

Spread the love


Last Updated:

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது.

News18News18
News18

வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி புகார்தாரரான ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி வேல்முருகன், வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டி, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது என கூறி காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு : சிபிஐக்கு மாற்றிய உத்தரவை மாற்ற முடியாது ; உயர்நீதிமன்றம் மறுப்பு



Source link


Spread the love
  • Related Posts

    மும்மொழி கொள்கை தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் பிரதான் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 14, 2026 9:56 PM IST “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.…


    Spread the love

    Tamil Live Breaking News: ”நல்விடியல் பிறக்கட்டும்..” தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 8…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *