சாலையோர வியாபாரிகள் விவகாரம் … மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

உயர்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளையும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் பாரிமுனை மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலையில், சாலையோர வியாபாரம் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்புக் குழுவை அமைக்கும்படி, மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சாலையோர கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, உயர்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளையும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், என்.எஸ்.சி. போஸ் சாலையில், சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் பல முறை எச்சரித்தும், சாலையோர வியாபாரம் தொடர்வதாக வேதனை தெரிவித்தனர்.

என்.எஸ்.சி. போஸ் சாலையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக் கூறிய நீதிபதிகள், இந்த சாலையோரம் வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்கும்படி, மாநகராட்சி ஆணையருக்கு, உத்தரவிட்டனர்.

மேலும், நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளும் வியாபாரம் செய்யக்கூடாத சாலைகளாக இதுவரை அறிவிக்கவில்லை என்றால், அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம் உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Source link


Spread the love
  • Related Posts

    மும்மொழி கொள்கை தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் பிரதான் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 14, 2026 9:56 PM IST “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.…


    Spread the love

    Tamil Live Breaking News: ”நல்விடியல் பிறக்கட்டும்..” தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 8…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *